மாஸ்டர் திரைப்பட ரிலீஸின் போது 100 சதவீத இருக்கைகள் நிரப்ப அனுமதி அளிக்க வேண்டும் என விஜய் வைத்த கோரிக்கையை தமிழக அரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் “மாஸ்டர்”. கடந்த ஏப்ரலிலேயே வெளியாக வேண்டிய இந்த படம் கொரோனா காரணமாக பல மாதங்களாக வெளியாகாமல் இருந்த நிலையில் பொங்கலுக்கு முன்னதாக இந்த படத்தை வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர். மேலும் கொரோனா காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னரே திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் பெரிய அளவில் படங்கள் எதுவும் வெளியாகாததால் திரையரங்குகளும் மாஸ்டர் ரிலீஸ எதிர்நோக்கி காத்துள்ளன.
இந்நிலையில் நடிகர் விஜய், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 13 அன்று மாஸ்டரை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் ஓவர்சீஸ் திரையரங்குகளில் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் 100% திரையரங்குகளை ஒதுக்குதல் தொடர்பாக கோரிக்கை விடுத்ததாக சொல்லப்பட்டது.
இது சம்மந்தமாக முதல்வரும் ஆலோசித்து முடிவு எடுப்பதாக அறிவித்திருந்தார். ஆனால் இப்போது தமிழக அரசு தரப்பில் இருந்து 75 சதவீத இருக்கைகளை நிரப்ப மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சொல்லப்பட்டதால் மாஸ்டர் படக்குழுவினர் அப்செட்டில் உள்ளதாக சொல்லப்படுகிறது.