Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

விஜய் ஆண்டனியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, சனி, 1 ஜனவரி 2022 (15:12 IST)
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள தமிழரசன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளராக இருந்த விஜய் ஆண்டனி, 'நான்' என்ற படத்தின் மூலம் ஹீரோவாகி அதன்பின்னர் பல வெற்றி படங்களை கொடுத்த நிலையில் சற்றுமுன் அவர் நடித்து வரும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனியின் புதிய படத்திற்கு 'தமிழரசன்' என்ற தலைப்பு வைக்கப்பட்டு மொத்த படமும்  சென்சார் சான்றிதழ் வாங்கி ரிலிஸுக்கு தயாராக இருந்தது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் இப்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழரசன் படம் ரிலிஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் ரிலிஸாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆர் ஆர் ஆர் ரிலிஸில் சிக்கலா? பீம்லா நாயக் படக்குழு எடுத்த முடிவு!