Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’தலைவி’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!

’தலைவி’ ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
, திங்கள், 23 ஆகஸ்ட் 2021 (15:57 IST)
பிரபல இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவான திரைப்படம் ’தலைவி’. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக இந்த படம் கடந்த மார்ச் மாதமே ரிலீசுக்கு தயாரானது 
 
ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் இந்த படம் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை 
இந்த நிலையில் ’தலைவி’ படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்தாலும் படக்குழுவினர் உறுதியாக ஓடிடியில் ரிலீஸ் இல்லை என்று அறிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு உள்பட ஒருசில மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன என்பதும் அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் உள்பட ஒரு சில படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ஓடிடியில் திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இதற்கான போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் ரிலிஸ் எப்போது? சன் பிக்சர்ஸ் எடுத்த முடிவு!