Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தளபதி 68 படத்தில் இணைந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட்!

தளபதி 68 படத்தில் இணைந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள்.. லேட்டஸ்ட் அப்டேட்!
, புதன், 27 செப்டம்பர் 2023 (07:05 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடக்கும் எனவும் 2 ஆம் தேதி முத படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பறிவ் குழுவினர் இணைந்துள்ளனர். ஏற்கனவே மாஸ்டர், பீஸ்ட் மற்றும் லியோ ஆகிய விஜய் படங்களுக்கு இவர்கள் ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காது…” – தயாரிப்பு நிறுவனம் திடீர் முடிவு!