Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் 69 படத்தின் இயக்குனர் & தயாரிப்பு நிறுவனம் பற்றி வெளியான தகவல்!

விஜய் 69 படத்தின் இயக்குனர் & தயாரிப்பு நிறுவனம் பற்றி வெளியான தகவல்!

vinoth

, வியாழன், 25 ஜனவரி 2024 (07:01 IST)
நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The GOAT’  என்று படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின்  ஷூட்டிங் சென்னை மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் நடந்தது. தற்போது ஐதராபாத்தில் முக்கியமானக் காட்சிகளை படமாக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் ரிலீஸ் ஆகி கவனம் பெற்றன.

இந்த படத்தை விரைவில் முடித்துவிட்டு விஜய் அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் சில படங்கள் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ளதாகவும், வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் இப்போது பரவி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்பு தேசிங் பெரியசாமி படத்தில் இணைகிறாரா கீர்த்தி சுரேஷ்?