தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று ராமநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சியாகிய நாங்கள் செய்வது இன உரிமை அரசியல். அதை இனவெறி என்று பேசுவோர்தான் இனவெறியர்கள்…விமர்சனத்தைப் பற்றி நான் கவலைப்படபோவதில்லை; இந்தக் கோபம் இல்லையென்றால் நான் அரசியலுக்கு வராமல் நான் கோடம்பாக்கத்திலேயே இருந்திருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாஜக என்னைத் தாண்டித்தான் தமிழகத்திற்கு வரமுடியும் எனத் தெரிவித்துள்ளார்.