செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை அடுத்தகட்ட ஊரடங்கு தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்த போதிலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. அவற்றில் முக்கியமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்காத நிலையில் தற்போது ஒரு சில நிபந்தனைகளுடன் திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது
இந்த நிலையில் படங்கள் தயாரித்து பாதியில் நிற்கும் படக்குழுவினர் அனைவரும் நாளை முதல் படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக அடுத்த வாரம் முதல் பல திரைப் படங்களின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் ’மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் ஹீரோ சிம்பு ஆகிய இருவரும் ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குவது என்பது குறித்து ஆலோசனை செய்துள்ளனர். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் கூட்டமாக இருப்பதால் தற்போதைய சூழ்நிலையில் அந்த காட்சிகளை படமாக்க முடியாது என்றும் கூட்டம் இல்லாத காட்சிகளை மட்டும் தற்போது படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர்
இந்த ஊரடங்கு தளர்வு தளர்வுக்குப்பின் சிம்புவின் மாநாடு படப்பிடிப்பு தான் முதலில் இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே படப்பிடிப்பிற்காக முதல் நபராக வீட்டை விட்டு வெளியேறும் நடிகர் சிம்புவாகத்தான் இருக்கும் என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது