திரையரங்குகளுக்கு தேவையானவை குறித்து புதிய ஆட்சி உருவான பின்னர் கோரிக்கை வைக்கப்படும் என தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து திரையரங்குகளில் 3 காட்சிகள் மட்டுமே திரையிடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஞாயிறன்று திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி தற்போது தொடர்ந்து திரையரங்குகளை இயக்க முடிவு செய்துள்ளோம். ஆனால் அதே நேரத்தில் புதிய அரசு உருவான பிறகு இரவு காட்சிகளை மீண்டும் திரையிட கோரிக்கை வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் புதிய ஆட்சி உருவான பின்னர் திரையரங்குகளுக்கு கூடுதல் சலுகைகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.