திரைப்படங்களின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்திலும் ஒரு ரூபாய் விவாயிகளுக்கு எனற விஷாலின் அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் மற்றும் அவரது அணியினர் வெற்றிப்பெற்றனர். இதையடுத்து தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் பெறுப்பேற்றார். பின், திரைப்படங்களின் ஒவ்வொரு டிக்கெட் கட்டணத்தில் இருந்தும் ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவித்தார்.
விஷாலின் இந்த அறிவிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியதாவது:-
விஷாலில் அறிவிப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவர் நடிகர் மற்றும் தாயாரிப்பாளர் சங்கத்தில் மட்டும்தான் பொறுப்பில் உள்ளார். திரையரங்கு குறித்த திட்டங்களை அறிவிக்க அவருக்கு எந்த உரிமையும் இல்லை. வேண்டுமானால் அவர் இலவசமாக விவசாயிகளுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கலாம். நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் நிர்வாகிகளை கொண்டு உதவி செய்யலாம், என்றார்.
மேலும் 99 சதவீத படங்கள் நஷ்டத்தை மட்டுமே அளிப்பதால், விஷால் இதுபோன்று அனுபவமில்லா முடிவு எடுக்காமல் ஆலோசணைகளை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.