Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் டைட்டில் கிடையாது: சூர்யா

தானா சேர்ந்த கூட்டம் படத்தில் டைட்டில் கிடையாது: சூர்யா
, வெள்ளி, 5 ஜனவரி 2018 (04:15 IST)
சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், விக்னேஷ் சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூர்யா பேசியதாவது:

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து  அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் ரஜினி சார் அவர்களுக்கும், கமல் சார் அவர்களுக்கும் விஷால் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருடைய வரவும் நல்வரவாக இருக்கவேண்டும். எங்கள் அனைவரின் ஆதரவும் அவர்களுக்கு உண்டு.

இப்போது விக்னேஷ் சிவன் கூறியது போன்று எப்படி எனக்கு ஓவ்வொரு டைரக்டர் முக்கியமோ அதை போலவே என்னுடைய வாழ்கைக்கு ஓவ்வொரு தயாரிப்பாளரும்  முக்கியமோ அதில் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் முக்கியம். இதை போல ஒரு 35 , 36 படங்களில் நிறைய நல்ல படங்களை கொடுக்க முடிந்துள்ளது என்று தைரியமாக சொல்ல முடியும். அதற்கு பல தயாரிப்பாளர்கள் , இயக்குநர்கள் காரணமாக இருந்துள்ளனர். ரசிகர்கள் நிச்சயமாக முக்கிய காரணமாக இருந்துள்ளனர்.
ஆனால் இன்னும் ஆதரவாக இருந்தது ஞானவேல் தம்பி என்னுடைய வாழ்க்கையில் நல்ல முடிவுகளை தேர்ந்தெடுத்து என்ன பண்ண வேண்டும் என்று அறிவுரை கூறுவார்.

எனக்கு அறிமுகம் கிடைத்த சில இயக்குநர்கள் எடுத்த முடிவுகள் என்னுடைய வாழ்கையில் முக்கியமாக அமைத்துள்ளது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் தான் இந்த கூட்டணி இணைந்தது. விக்னேஷ் சிவனை சந்திக்க போவதாக ஹரி சாரிடம் கூறினேன் அதற்கு அவர் நிச்சயமாக அவருடன் படம் பண்ணவேண்டும் என்று அவர் கூறினார். என் வீட்டில் உள்ள அனைவரும் அவருடன் படம் பண்ணவேண்டும் என்று கூறினார்கள். 1987-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டது என்றாலும் முற்றிலும் வேறு ஓரு பாதையில் கதை செல்கின்றது.

முதல் சந்திப்பில் இருந்து தானா சேர்ந்த கூட்டம் என்று படத்தின் பெயர் வைக்கும் வரை சிறப்பாக அமைந்தது. உடன் பணிபுரிந்த அணைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் மிக சிறப்பாக பணிபுரிந்துள்ளார்கள். படத்தில் உள்ள அணைத்து பாடல் மிக சிறப்பாக அமைத்துள்ளது. 7 வருடங்களுக்கு பிறகு பண்டிகை தினத்தன்று படம் வருவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா படங்களிலும் தொடக்கத்தில் வரும் புகை பிடிக்காதீர், மது அருந்தாதீர் போன்ற Disclaimer card டைட்டில் எங்கள் படத்தில் வராது அப்படி ஓரு படத்தை எடுத்துள்ளார். அதற்கு சென்சார் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர் என்றார் சூர்யா

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விராத்கோஹ்லி-அனுஷ்காவை தொடர்ந்து அடுத்த நட்சத்திர ஜோடியின் திருமணம்