ஓடிடிகளின் வரவுக்கு பிறகு திரையரங்குக்கு சென்று படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. பார்வையாளர்கள் நல்ல விமர்சனம் வரும் படங்கள் அல்லது பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே திரையரங்குக்கு சென்று பார்க்கின்றனர்.
இந்தியாவில் பொதுவாக திரையரங்கில் வெளியாகி 28 நாட்களுக்குப் பிறகு படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகின்றன. அதனால் ஓடிடியிலேயே பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் பரவியுள்ளது.
இந்நிலையில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான மூன்று படங்கள் இந்த வாரம் ஓடிடிகளில் வெளியாகின்றன.
கழுவேர்த்தி மூக்கன் – அருள்நிதி நடிப்பில் மே 21 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல விமர்சனங்களை பெற்றாலும் இந்த படம் ரசிகர்களை திரையரங்கு நோக்கி பெரிதாக ஈர்க்கவில்லை. இந்த படம் ஜூன் 23 ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.
குலசாமி – விமலின் மற்றொரு கிராமத்து படமாக வெளியான குலசாமி பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் டெண்ட்கொட்டா என்ற ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.
கருங்காப்பியம் – இப்படி ஒரு படம் வந்ததே பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரியாது. இந்நிலையில் சிம்ப்ளி சவுத் என்ற ஓடிடியில் வெளியாகிறது.