கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 4 அல்லது 5 திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் நாளைய வெள்ளிக்கிழமையில் நான்கு திரைப்படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
சித்தார்த் நடித்த ’அருவம்’, தமன்னா நடித்த ’பெட்ரோமாக்ஸ்’, யோகி பாபு நடித்த ’பப்பி’ மற்றும் சுரேஷ் காமாட்சி இயக்கிய ’மிக மிக அவசரம்’ ஆகிய நான்கு திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளன
இந்த நான்கு படங்களும் சின்ன பட்ஜெட் படங்கள் என்பதாலும் சுமாரான புரமோஷன் மட்டுமே செய்யப்பட்டு இருப்பதாலும் குறைந்த அளவுக்கு தியேட்டர்களே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் ரிலீசான சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டு பிள்ளை மற்றும் கடந்த வாரம் வெளியான தனுஷின் ‘அசுரன்’ ஆகிய திரைப்படங்கள் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த திரைப்படங்களை தியேட்டர் அதிபர்கள் தூக்க விரும்ப மாட்டார்கள் என்றே தெரிகிறது
இதனால் இன்று வெளியாகும் நான்கு திரைப்படங்களுக்கு ஒரு சில காட்சிகள் மட்டுமே திரையரங்குகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ’அருவம்’ மற்றும் ’மிக மிக அவசரம்’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால் ரிலீசுக்கு பின் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் காட்சிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அதேபோல் தமன்னாவின் ’பெட்ரோமாக்ஸ்’ரசிகர்களுக்கு த்ரில் உணர்வை கொடுத்தால் நல்ல வரவேற்பை பெறும். எனவே நாளை நாளை வெளியாகும் நான்கு திரைப்படங்கள் தேருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்