Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யாஷ் நடிக்கும் 19வது திரைப்படம்: டைட்டிலை அறிவித்த படக்குழு..!

யாஷ் நடிக்கும் 19வது திரைப்படம்: டைட்டிலை அறிவித்த படக்குழு..!
, வெள்ளி, 8 டிசம்பர் 2023 (10:56 IST)
பிரபல கன்னட நடிகர் கேஜிஎஃப் புகழ் யாஷ் நடிக்கும் 19 வது திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்றுமுன் அந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  
 
கேஜிஎஃப்  திரைப்படம் மூலம் உலக புகழ் பெற்ற யாஷ், கேஜிஎஃப் 2 என்ற படத்தில் நடித்தார் என்பதும் இந்த படம் உலக அளவில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது தெரிந்தது  
 
இந்த நிலையில் யாஷ் நடிக்கும் 19-வது திரைப்படத்தின் டைட்டில் வீடியோ சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பாடத்திற்கு  ’டாக்ஸிக்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை பெண் இயக்குனர் கீது மோகன் தாஸ் தான் இயக்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கேவிஎன் ப்ரடக்சன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எது செஞ்சாலும் விமர்சனம் வரத்தான் செய்யும்… போஸ் வெங்கட்டுக்கு துணிவு நடிகர் பதில்!