மலையாள சினிமா உலகில் இருந்துதான் இப்போது தென்னிந்திய சினிமாக்களுக்கு ஹீரோயின்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி வாத்தி படம் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர்தான் சம்யுக்தா.
தன் பெயருக்குப் பின்னால் மேனன் என்ற சாதி பெயரை நீக்கியதாக அவர் கூறியது பலரின் பாராட்டுகளைப் பெற்றது. இதுபற்றி அவர் “வாத்தி படத்தில் இருந்து அந்த பெயர் இருக்காது. சாதி அடையாளத்தை போட்டுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. சாதியிலும் உடன்பாடு இல்லை. என்னை சம்யுக்தா என்று அழைத்தாலே போதும்” எனக் கூறியிருந்தார்.
வாத்தி படத்துக்குப் பிறகு தமிழில் இன்னும் அடுத்த படத்தில் அவர் கமிட்டாகவில்லை. இளைஞர்களின் விருப்ப நடிகை பட்டியலில் இணைந்துள்ள சம்யுக்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது ரசிகர்களால் நிரம்பி வழிகிறது. அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன. அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…