Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியாரை அவமதிக்கும் நோக்கம் இல்லை... வடக்குபட்டி ராமசாமி இயக்குனர்!

பெரியாரை அவமதிக்கும் நோக்கம் இல்லை...  வடக்குபட்டி ராமசாமி இயக்குனர்!

vinoth

, வெள்ளி, 19 ஜனவரி 2024 (07:47 IST)
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்து முடித்துள்ள திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்ட இந்த படத்தை கார்த்திக் யோகி இயக்கி உள்ளார் என்பதும் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவுகள் பிப்ரவரி இரண்டாம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வேலையாகி வைரல் ஆகி வருகிறது.  இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலர் ரிலீஸானது.

இந்த டிரைலரில் மறைந்த திராவிடர் கழக தலைவர் பெரியாரை நக்கல் செய்வது போல சில வசனங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த டிரைலர் வெளியானதில் இருந்து சமூகவலைதளத்தில் பெரியாரிய ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவது மேலும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இந்த படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி “மக்கள் மனது புண்படும்படி காட்சிகள் இல்லை. அதில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. பெரியாரை அவமதிக்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. ஆடியோ வெளியீட்டு விழாவில் சந்தானம் அதற்கு விளக்கம் அளிப்பார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அட்டகாசமான விஷுவல்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த மோகன் லாலின் மலைக்கோட்டை வாலிபன் டிரைலர்!