ஆஹா ஓடிடி தமிழில் கால்பதிக்கும் முயற்சியாக பல முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். இதனால் அவருக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டது.
இந்நிலையில் இப்போது வடிவேலுவே நடிக்காமல் இருக்க முடியவில்லை என்று கூறி எப்படியாவது விரைவில் ஒப்பனை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக உள்ளாராம். அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்து விட்டது என சொல்லப்படுகிறது.
தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான ஆஹா தமிழில் கால்பதிக்க உள்ளது. அதற்காக சில படங்களையும் வாங்கி வெளியிட உள்ளது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை தொகுப்பாளராக வைத்து ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. வடிவேலுவும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.