சர்ச்சை நாயகியான வனிதா தனது நெஞ்சில் புதிய டாட்டூ ஒன்றை குத்திக்கொண்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்த நிலையில் வனிதாவை சுற்றி மிகப்பெரிய சர்ச்சைகள் உருவாக்கப்பட்டன. இதுகுறித்து அவரை கேலி மற்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த அவர் இது சம்மந்தமாக காவல்நிலையத்தில் புகாரும் கொடுத்தார். ஆனால் திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டர் பாலை வனிதா பிரிந்தார்.
இந்நிலையில் இப்போது விஜய் தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் அவர் தலைகாட்டி வரும் நிலையில் தனது புதிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் நெஞ்சில் புதிதாக பதித்துள்ள டாட்டூ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.