சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால், ஒரு சில பொது மக்கள் அதனை சரியாக பின்பற்றாமல். வைரஸின் தாக்கத்தை பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் வாகனங்களில் சுற்றி திரிந்து வருகின்றனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் தடியடி நடத்தி அவர்களை வீட்டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அந்த
வகையில் தற்போது பெங்களூரில் போலீஸ் ஒருவரை சில நபர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வரலக்ஷ்மி சரத்குமார், என்ன முட்டாள்தனம்... காவல்துறையினர் தங்கள் உயிரை பணய வைத்து... உங்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்துகிறார்கள். ஆனால், நீங்கள் அவர்களை இப்படி நடத்துகிறீர்கள். Wht bulls ** t இவரகள் கொரோனா வந்து தான் சாகனும். அந்த போலீஸ் அதிகாரியிடம நான் அந்த முட்டாள்களின் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என மிகுந்த கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.