கடவுள் படம் எடுத்த இயக்குனர் வேலு பிரபாகரன் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார்.
வேலுபிரபாகரனின் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான படம் கடவுள். அப்படத்தில் நாத்திகத்திற்கு எதிரான பல கருத்துகள் இடம் பெற்றிருந்தது. அதில் வேலுபிரபாகரன் நடித்திருந்தார்.
அதன் பின் அவர் 2009ம் ஆண்டு இவர் இயக்கிய ‘காதல் கதை’ படம் வெளிவந்தது. அப்படத்தில் நடித்த ஷிர்லி தாஸையே அவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சமீபத்தில் அவர் இயக்கிய ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ படம் வெளிவந்தது.
இந்நிலையில், கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை அவரே இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் அவரின் மனைவி ஷிர்லி தாஸே அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.