Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ஏழைகளின் நாட்டில் 100 கோடி சம்பளம் வாங்குவது அநியாயமானது… இயக்குனர் வேலுபிரபாகரன் ஆதங்கம்!

ஏழைகளின் நாட்டில் 100 கோடி சம்பளம் வாங்குவது அநியாயமானது… இயக்குனர் வேலுபிரபாகரன் ஆதங்கம்!
, செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (17:42 IST)
தயாரிப்பாளர் சி வி குமார் தயாரித்துள்ள ஜாங்கோ என்ற டைம் லூப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நேற்று நடந்தது.

ஒரு காலத்தில் சி வி குமார் பரபரப்பாக படங்களை தயாரித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில் அவர் சிறு இடைவெளி எடுத்துக் கொண்டார். ஆனால் இப்போது மீண்டும் படங்களை தயாரிக்க ஆரம்பித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கொற்றவை என்ற படத்தையும் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில் அவர் தயாரிப்பில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ஜாங்கோ திரைப்படத்தின் டிரைலர் நேற்று இணையத்தில் வெளியாகியுள்ளது. டைம் டிராவலை மையமாக வைத்து இந்தியாவில் சில படங்கள் வெளியாகியுள்ள நிலையில் முதன் முதலாக டைம் லூப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடந்தது. அதில் படத்தில் நடித்துள்ள இயக்குனர் வேலு பிரபாகரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ‘இந்த நாடு ஏழைகளின் நாடு. ஆனால் இங்கு ஒரு நடிகர் 100 கோடி சம்பளம் வாங்குகிறார். இன்னொருவர் 50 கோடி சம்பளம் வாங்குகிறார். 100 நாட்கள் நடித்துவிட்டு 100 கோடி சம்பளம் வாங்குவது எவ்வளவு அயோக்கியத்தனமானது. அரசியல்வாதிகளும் அப்படிதான் இருக்கிறார்கள். அதனால்தான் நடிகர்களுக்கு அரசியல்வாதியாக வேண்டும் என்ற ஆசை வருகிறது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகுமாரின் சபதம்: 5வது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!