இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் படத்துக்கு பிறகு தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார்.
தொடர்ந்து வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இப்போது அவர் விடுதலை படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்க உள்ளார்.
அதையடுத்து கமல், விஜய் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாகவும் ஏற்கனவே இயக்கி முடித்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது தெலுங்கு நடிகர் ஜூனியர் என் டி ஆருக்குக் கதை ஒன்றை சொல்லி அந்த படத்தையும் இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த படம் 2025 ஆம் ஆண்டு தொடங்கும் என சொல்லப்படும் நிலையில் மேலும் ஒரு தமிழ் ஹீரோவும் இந்த படத்தில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.