கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.
இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது. இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் படம் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட விடுதலை 2 படத்தின் காட்சிகள் எல்லாம் நான்கு மணிநேரத்துக்கு மேல் வருவதால் அதை இரண்டாகப் பிரித்து மூன்றாவது பாகத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.