இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டனர். இந்த திருமணத்துக்குப் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படவில்லை.
இதனால் அந்த திருமண வீடியோ முன்னணி ஓடிடியான நெட்பிளிக்ஸில் வெளியாகும் என சொல்லப்படது. இதற்காக நெட்பிளிக்ஸ் தளம் ஒன்று பெரும் தொகை ஒன்றை நயன்தாரா தம்பதிகளுக்கு கொடுத்ததாக தகவல்கள் பரவின. ஆனால் திருமணம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் அந்த வீடியோ வெளியாகவில்லை.
இந்நிலையில் இப்போது “Nayanthara: Beyond fairy tales” எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோ நவம்பர் 18 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று அந்த வீடியோவின் டிரைலர் வெளியாகவுள்ளதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.