காப்பான் படத்துக்கு வந்த எதிர்மறை விமர்சனங்களுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் கடந்த சில திரைப்படங்கள் மக்களிடம் சரி்யான வரவேற்பை பெறாத நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவான காப்பான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களாக மோகன் லால், ஆர்யா, போமன் இரானி மற்றும் கதாநாயகியாக ஷாயிஷாஆகியோர் நடித்துள்ளனர். அயன், கோ, கவண் ஆகிய வெற்றித் திரைப்படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த், இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் நேற்று ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் எதிரமறை விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக தனது டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதில் ‘இன்று ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். விமர்சகர்கள் தங்கள் புத்திசாலி தனத்தைக் காட்டவே நினைக்கிறார்கள். படங்களைத் தோண்டித் துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம் காப்பான்' அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நல்ல படம். உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள். படம் சொல்லும் தேசபக்தி தருணங்களை கண்டு ரசியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.