விஜய் ஆண்டனியின் அடுத்த படம் டிராப்பா?
விஜய் ஆண்டனி ஏற்கனவே நான்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக விஜய் மில்டன் இயக்கத்தில் ஒரு திரைப் படத்தில் நடிப்பதாக பேச்சுவார்த்தை நடந்தது
இதற்காக விஜய் மில்டன் கோவா அருகிலுள்ள தீவுகளுக்குச் சென்று லொகேஷன் பார்த்து லொகேஷன்களை முடிவு செய்ததாக செய்திகள் வெளியானது
ஆனால் தற்போதைய நிலவரப்படி இந்த படம் டிராப் என்று கூறப்படுகிறது. விஜய் மில்டன் கன்னடத்தில் ஒரு படம் இயக்குவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதால் அந்த படத்தை அவர் முதலில் இயக்க சென்றுவிட்டதாகவும் விஜய் ஆண்டனி படத்தை அவர் தள்ளி வைத்திருப்பதாக கூறப்படுகிறது
ஆனால் ஏற்கனவே பிஸியாக இருக்கும் விஜய் ஆண்டனி மேலும் ஒரு சில படங்களுக்கு நடிக்க ஒப்பந்தம் ஆகும் நிலையில் இருப்பதால் விஜய் ஆண்டனி மற்றும் விஜய் மில்டன் இணையும் படம் கிட்டத்தட்ட டிராப் என்றே கூறப்படுகிறது
இருப்பினும் எதிர்காலத்தில் விஜய் ஆண்டனி விஜய் மில்டனுடன் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்