Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்க்கு இந்த மாசம்தான் கடைசியாம்…

விஜய்க்கு இந்த மாசம்தான் கடைசியாம்…
, சனி, 3 ஜூன் 2017 (16:00 IST)
அட்லீ படத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் கடைசி ஷெட்யூல், இந்த மாதத்துடன் முடிவடையும் என நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



அட்லீ இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் விஜய். மூன்று வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்கின்றனர். இதில், நித்யா மேனன் சம்பந்தப்பட்டக் காட்சிகளை சென்னை மற்றும் ராஜஸ்தானிலும், காஜல் அகர்வால் சம்பந்தப்பட்டக் காட்சிகளை ஐரோப்பாவிலும் படமாக்கிவிட்டார் அட்லீ.

அடுத்து, சமந்தா மட்டும்தான் பாக்கி. தற்போது சிறிய இடைவேளை விட்டிருக்கும் அட்லீ, விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடங்குகிறார். அதில், விஜய் – சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கப் போகிறார். அத்துடன், ஷூட்டிங் முடிவடைகிறதாம். அதாவது, இந்த மாத இறுதியுடன். அதன்பிறகு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்கிறார்கள்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல கவர்ச்சி நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நீதிமன்றம் அதிரடி!