Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் இயக்குநரின் இசை உரிமையை வாங்கிய கெளதம் மேனன்

விஜய் இயக்குநரின் இசை உரிமையை வாங்கிய கெளதம் மேனன்
, புதன், 7 ஜூன் 2017 (12:39 IST)
‘என் ஆளோட செருப்பக் காணோம்’ படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கிறார் கெளதம் மேனன்.

 
விஜய் நடித்த ‘புதிய கீதை’ படத்தை இயக்கிய ஜெகன், ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தில், ‘பசங்க’ படத்தில் நடித்த தமிழ் (பக்கோடா பாண்டி) ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் இஷான் தேவ்.
 
இந்தப் படத்தின் இசை உரிமையை வாங்கியிருக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன். ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்’  மூலம் படங்களைத் தயாரித்து வரும் கெளதம் மேனன், ஒரு படத்தின் இசை உரிமையை வாங்குவது இதுவே முதல்முறை.  தான் சொந்தமாகத் தயாரித்த ‘அச்சம் என்பது மடமையடா’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படங்களின் பாடல்களை, ஏற்கெனவே ‘ஒன்றாக எண்டெர்டெயின்மெண்ட்’ மூலம் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயிருடன் இருப்பவர் வேடத்தில் நடிக்கும் ஹிருத்திக் ரோஷன்