Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் கோட் படத்தில் இருந்து விலகியதா சன் டிவி?

விஜய்யின் கோட் படத்தில் இருந்து விலகியதா சன் டிவி?

vinoth

, திங்கள், 15 ஏப்ரல் 2024 (07:40 IST)
விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக ரஷ்யாவுக்கு சென்றுள்ளது.  இந்த படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியது. அதே போல தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த முடிவில் இருந்து சன் தொலைக்காட்சி நிறுவனம் விலக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கானக் காரணம் என்ன என்று தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வட சென்னை 2 அவ்வளவுதான்… சூசகமாக பதிலளித்த இயக்குனர் வெற்றிமாறன்!