Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 மணி நேரம் ரன்னிங் டைம்: ‘மாஸ்டர்’ தேறுமா?

3 மணி நேரம் ரன்னிங் டைம்: ‘மாஸ்டர்’ தேறுமா?
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (11:15 IST)
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மதியம் 12.30 மணிக்கு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் ‘மாஸ்டர்’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் ஆனது என்பதும் அந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் ரன்னிங் டைம் 178 நிமிடங்கள் என்ற தகவல் தற்போது வந்துள்ளது 
 
178 நிமிடங்கள் என்பது கிட்டத்தட்ட 3 மணி நேரம் என்பதால் படத்தின் நீளம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக விஜய் ரசிகர்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மூன்று மணி நேரம் ரன்னிங் டைம் உள்ள பல படங்கள் தோல்வியில் முடிந்துள்ள நிலையில் ‘மாஸ்டர்’ படமும் அந்த லிஸ்ட்டில் இணையுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது 
 
ஆனால் அதே நேரத்தில் விஜய் , விஜய்சேதுபதி, மாளவிகா, லோகேஷ் கனகராஜ், அனிருத் ஆகிய பிரபலங்கள் இந்த படத்தில் இருப்பதால் மூன்று மணி நேர ரன்னிங் டைம் என்பது ஒரு பெரிய குறையாக இருக்காது என்றும் அவர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் 
 
படத்தின் நீளம் மூன்று மணி நேரமாக இருந்தாலும் நேரம் போவதே தெரியாத அளவிற்கு கண்டிப்பாக உருவாக்கி இருப்பார் லோகேஷ் கனகராஜ் என்று நம்பப்படுவதால் இந்த படத்தின் வெற்றி உறுதி என்று விஜய் ரசிகர்கள் அடித்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’அவர்களை’ வைத்துக் கொண்டு நல்ல படம் எடுக்கவே முடியாது – ராஜமௌலி ஓபன் டாக்!