பாலகிருஷ்ணா நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வீரசிம்மா ரெட்டி திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அமெரிக்காவிலும் இந்த படம் ரிலீஸ் ஆன நிலையில் அங்குள்ள ஒரு தியேட்டரில் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாட்டமாக பார்த்துள்ளனர். வழக்கம் போலவே சோஷியல் மீடியாவில் இந்த படம் ட்ரோல் செய்யப்பட்டாலும், பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் படத்தை பெரியளவில் ஹிட் ஆக்கியுள்ளனர்.
இதையடுத்து அவர் பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்குகிறார். படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் உள்பட நான்கு கதாநாயகிகள் நடிக்க உள்ளனர்.
இந்த படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என இப்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் லியோ படத்துக்கு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மிகப்பெரிய போட்டி உருவாகியுள்ளது.