ஜப்பான் படத்தில் காவல் அதிகாரியாக நடிக்கும் பிரபல இயக்குநர்!
பிரபல நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் காவல்துறை அதிகாரி என்ற முக்கிய கேரக்டரில் பிரபல இயக்குனர் விஜய் மில்டன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோலிசோடா உள்பட ஒருசில படங்களை இயக்கிய இவர் ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் இந்த படத்தில் ஏற்கனவே சுனில் வில்லனாக நடித்து வரும் நிலையில் தற்போது விஜய்மில்டன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருகிறது