Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விஜய் நடிக்க மறுத்த கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்தேன்: சுசீந்திரன்

விஜய் நடிக்க மறுத்த கதையில் புதுமுகத்தை நடிக்க வைத்தேன்: சுசீந்திரன்
, சனி, 18 ஆகஸ்ட் 2018 (19:21 IST)
விக்ரம் நடித்த 'தூள்', சூர்யா நடித்த 'சிங்கம்'  உள்பட ஒருசில வெற்றி படங்களில் விஜய் நடிக்க மறுத்ததாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் தற்போது 'ஜீனியஸ்' என்ற படத்திலும் விஜய் நடிக்க மறுத்ததாக அந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். அவர் இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
 
நான் ஜீனியஸ் திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்த போது அது கதையாக இல்லை. கருவாக தான் இருந்தது. நான் இந்த கதையையும் , கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன். அது கதையாக மாறிய பின்பு ஜீனியஸ் கதையை விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் இந்த கதையை கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. 
 
webdunia
கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ஜீனியஸ் படமாக வந்துள்ளது. இப்படம் மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்கு படமாக இருக்கும். எனக்கு ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற 'பி.கே' திரைப்படம் மிகவும் பிடிக்கும். அந்த படத்தின் பாதிப்பில் தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் 'பி.கே' போல மெசேஜ் சொல்லும் என்டர்டேயினாராக இருக்கும். இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி' என்று இயக்குனர் சுசீந்திரன் பேசினார்.
 
இந்த படத்தின் ஹீரோவும் தயாரிப்பாளருமாகிய ரோஷன் பேசியதாவது: சில வருடங்களுக்கு முன்னால் நான் முதலில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறிவந்தார்கள். அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல் தான் இருந்தேன். கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் “ நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள் ? “ என்று சுசீந்திரன் கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம் தான் இன்று சுசீந்தரன் சார் இயக்கத்தில் ஜீனியஸ் திரைப்படத்தில் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது.  நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் என்னுடைய நண்பன் என்னுடைய பிஸ்னஸ்சையும் குடும்பத்தையும் பார்த்துக்கொண்டார். அவர் தான் எனக்கு மிகப்பெரிய பலம். அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக்கொண்ட என்னுடைய நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால் தான் நான் இன்று இங்கு உள்ளேன். முதலில் ஒரு படத்தை தயாரித்தேன் ஆனால் அது இன்னும் வெளியாகவில்லை. அதற்கு சில காரங்கள் உள்ளது. ஜீனியஸ் போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை சினிமாவுக்கும் , மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்திரன்  அவர்களுக்கு நன்றி

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேகம் படைத்த அதிரடி சாதனை!