Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவிக்கும் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’!

vinoth

, வெள்ளி, 14 ஜூன் 2024 (11:56 IST)
தென்மேற்குப் பருவக் காற்று படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து 50 படங்களில் நடித்துள்ளார். அவரின் 50 ஆவது படமாக நித்திலன் இயக்கியுள்ள மகாராஜா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் ரிலீஸாகி படத்தின்  மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று படம் ரிலீஸாகியுள்ள நிலையில் பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற ஆரம்பித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதால் இந்த வெற்றி அவருக்கு மிகவும் முக்கியமானதாக அமையும். படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்வதாகவும், அதிலும் குறிப்பாக க்ளைமேக்ஸ் காட்சி எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேம் சேஞ்சர் படத்தில் இரட்டை வேடத்தில் ராம்சரண் தேஜா?