நடிகர் விக்ரம் சினிமாவில் அறிமுகமாகி இன்றோடு 30 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட போராட்டத்துக்கு பின் சேதுவின் மூலம் வெற்றியை ருசித்த விக்ரம் அதன் பின் வரிசையாக அடுத்தடுத்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகராக மாறினார். பிதாமகன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார். கதாபாத்திரத்துக்காக தனது உடலை வருத்தி நடிக்கும் நடிகர்கள் பட்டியலில் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்தில் உள்ளார் விக்ரம்.
இந்நிலையில் அவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு 30 ஆண்டுகள் கடந்துள்ளதாம். பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் அவர் நடித்த என் காதல் கண்மணி திரைப்படம் 1990 ஆம் ஆண்டு இதே நாளில்தான் ரிலிஸ் ஆகியுள்ளது. இதையடுத்து #30yearsofvikram என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.