விக்ரம் தற்போது ஸ்கெட்ச் படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடித்துள்ளார். இதனை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்கவுள்ளார்.
விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் - தமன்னா இணைந்து நடித்துள்ள படம் ஸ்கெட்ச். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் தொடங்கவுள்ளன. படம் வருகிற நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இதோடு சேர்த்து ஹரி இயக்கும் சாமி 2 படத்தையும் ஒரே நேரத்தில் நடித்து முடித்துவிட திட்டம் போட்டுள்ளாராம் விக்ரம்.
இரண்டு படத்தையும் ஒரே கையோடு முடித்துவிட்டு, அடுத்து புது படத்தில் கமிட்டாகவுள்ளாராம்.