Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல் பிறந்தநாளில் விக்ரம் டீசர்… லோகேஷ் கனகராஜ் திட்டம்!

கமல் பிறந்தநாளில் விக்ரம் டீசர்… லோகேஷ் கனகராஜ் திட்டம்!
, திங்கள், 1 நவம்பர் 2021 (16:00 IST)
லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் டீசர் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

உலகநாயகன் கமலஹாசன் நடித்து தயாரித்து வரும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த படத்தில் கமலோடு விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

விறுவிறுப்பாக இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் வரும் நவம்பர் 7 ஆம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசரை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏய் நீ எதுக்குடா உள்ள போற.... அண்ணாச்சியை ஒருமையில் திட்டிய பிரியங்கா!