நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கியுள்ள நிலையில் வைரஸ் பரவுதல் குறித்து வெளியான மலையாள படம் ட்ரெண்டாகி வருகிறது.
கொரோனா தற்போது கேரளாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கொரோனாவுக்கு முன்னரே கொடிய வைரஸ் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறது. வௌவால்கள் மூலமாக கேரளாவில் கடந்த ஆண்டில் பரவிய நிபா வைரஸால் பல மக்கள் இறந்தனர். எச்சில் துப்புவது, தும்முவது போன்றவற்றால் பரவிய நிபா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர கொரோனா முன்னெச்சரிக்கை அளவுக்கே போராட வேண்டி இருந்தது.
மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டு நிபாவை கேரளா கட்டுக்குள் கொண்டு வந்த கதைதான் “வைரஸ்” படம். இந்த படத்தில் வைரஸ் பொதுவாக எப்படி பரவுகிறது என்பது குறித்த பல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். ஆஷிக் அபு இயக்கத்தில் வெளியான இந்த படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. மக்களிடையே வைரஸ் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத இந்த சமயத்தில் அனைவரும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என சில திரைப்பட ரசிகர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.