சமூகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் விஷால். அதை நிரூபிக்கும் விதமாக அவர் தற்பொழுது சன் டி.வி யில் மக்களுகான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார்.
நடிகர் விஷால் தான் தொகுத்து வழங்கும் "சன் நாம் ஒருவர்" நிகழ்ச்சியை பற்றிய விளக்கத்தை கொடுத்துள்ளார். இது 26 வாரங்களுக்கு நடக்கக்கூடிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி, இதில் சமூகத்தில் பாதிக்கபட மற்றும் பின்தங்கியவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை நிறைவேற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.
முதன்முறையாக சின்னத்திரையில் அடியெடுத்துவைத்துள்ள விஷால் இந்த நிகழ்ச்சியின் மூலமாக சமூகத்தில் பின்தங்கிய 30 குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் களமிறங்கியுள்ளார் . விஷாலின் நண்பர்களான நடிகர் ரமணா மற்றும் நந்தா இருவரும் சேர்த்து இந்த நிகழ்ச்சியை தயாரிக்கின்றனர்.
அதன் ஒரு சில எபிசோட் முடிந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கார்த்தியும் இதில் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்துள்ளார். இந்நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமானது என்று தெரிவித்த விஷால், இது கொஞ்சம் சொல்வதெல்லாம் உண்மை போல் தெரிந்தாலும், அப்படி இருக்காது என்றார் விஷால்.