நடிகர் விஷால் தனது தாயின் அறக்கட்டளை மூலம் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்.
யாருமே நினைத்துப் பார்க்காத சமயத்தில் உலகில் கொரொனா பரவியது. இந்நோய்த் தொற்று இந்தியாவிலும் பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
இந்நிலையில் இவ்வருடம் உருமாறிய கொரொனா வைரஸில் இரண்டாம் அலை முந்திய வைரஸைவிட அதிக பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.
இத்தொற்றால்,இந்தியாவில் ஒருநாளில் சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான் விஷால், இக்கொரொனா காலத்தில் தனது தாயின் தேவி அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். கடந்த வருடம் முன்களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், பொதுமக்கள்,மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகள்