கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடக்காமல் திரை உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளன. பெரிய நடிகர்களுக்கு பிரச்சனைகள் இல்லை என்றாலும் இலட்சக்கணக்கான சினிமா தொழிலாளர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கு வருமானம் இல்லாமல் பசியாலும் பட்டினியாலும் வாடுகின்றனர்
எனவே திரைப்பட படப்பிடிப்பை நிபந்தனையுடன் அனுமதிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகியோர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்த வேண்டுகோளை அடுத்து சமீபத்தில் தொலைகாட்சி படப்பிடிப்புக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை அடுத்து திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது
இந்த நிலையில் சற்று முன்னர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இது குறித்து கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது ’சினிமா படப்பிடிப்பு தொடங்குவது குறித்த விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து இம்மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதம் முதல் திரைப்பட படப்பிடிப்பு தொடங்க நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் திரையுலகினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்
திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கினாலும் திரையரங்குகள் திறக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அதற்கும் விரைவில் விடிவுகாலம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது