சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் இரண்டாவது வாரமாக தற்போது வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இன்னும் மூன்று நாட்களில் கங்குவா திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
அமரன் திரைப்படத்தை ஒரு சில திரையரங்குகள் தூக்க முடியாது என்று கூறுவதால், கங்குவா படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கின்ற நிலையில், அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி அன்று வெளியான அமரன் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, மூன்றாவது வாரம் ஒரு படம் திரையரங்கில் ஓடினால், திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிக பங்குகள் கிடைக்கும் என்பதால், அமரன் திரைப்படத்தை இன்னும் ஒரு வாரம் முழுமையாக ஓட்ட பல திரையரங்குகள் முடிவு செய்துள்ளன. இதனால் கங்குவா படத்திற்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, கங்குவா படத்தின் முதல் வார வசூலில் 75 சதவீதம் வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்பதால், பல விநியோகஸ்தர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாகவும், இதனால் பல தியேட்டர்கள் இன்னும் புக் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே விஜய்யின் கோட் படத்திற்கும் இதே பிரச்சனை இருந்ததையும், கடைசி நேரத்தில் தான் அந்த படத்திற்கும் தியேட்டர் புக் ஆகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.