கடந்த சில மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் சோனு சூட்.
படங்களில் வில்லனாய் நடித்தாலும் நிஜ வாழ்வில் மக்கள் மனதில் ஹீரோவாக மாறியுள்ளவர் சோனு சூட். கொரோனா ஊரடங்கின் போது வெளிமாநில தொழிலாளர்கள் ஊர் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து கொடுத்தது, காய்கறி விற்ற ஏழை பெண்ணுக்கு வேலை வாங்கி கொடுத்தது. விவாசாயி ஒருவருக்கு ட்ராக்டர் வாங்கி கொடுத்து உதவியது என இவரது செயல்கள் சமீப காலமாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இந்நிலையில் பலரும் சோனு சூட்டிடம் இதுபோல கேட்க, ஒரு கட்டத்தில் அது கேலிக்குரியதாகவும் மாற ஆரம்பித்துள்ளது.
சமூக வலைதளத்தில் மஞ்சு ஷர்மா என்ற பெண் ‘எனது போனில் இண்டர் நெட் வேகத்தை அதிகரிக்க முடியுமா?’ என அவரை கேலி செய்யும் விதமாக டிவீட் செய்ய அதற்கு கலகலப்பான பதிலை அளித்துள்ளார் சோனு. தனது பதிலில் ‘இப்போது நான் ஒரு பெண்ணின் கம்ப்யூட்டரை ரிப்பேர் செய்வது, ஒரு பெண்ணின் திருமணத்தை முடித்து வைப்பது மற்றும் ஒரு வீட்டு குழாயில் நீர் வரவைப்பது போன்ற பிரச்சனைகளில் பிஸியாக இருக்கிறேன். அதனால் நாளை காலை வரை பொறுக்க முடியுமா?’ எனக் கூறியுள்ளார்.