கேஜிஎஃப் மூலம் பிரபலமான நடிகர் யஷ் இனி பேன் இந்தியா படங்களில் மட்டுமே நடிப்பார் என கேஜிஎஃப் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கி யஷ் நடித்து வெளியான படம் கேஜிஎஃப். பேன் இந்தியா படமாக வெளியாகி ஹிட் அடித்த இந்த படத்தை தொடர்ந்து தற்போது வெளியான இதன் இரண்டாம் பாகம் கேஜிஎஃப் 2ம் பெரும் ஹிட் அடித்துள்ளது.
தற்போது கேஜிஎஃப் 3 படத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த படத்தின் மூலம் நடிகர் யஷ் இந்தியா முழுவதும் பிரபலமாகி உள்ளார். இந்நிலையில் இனி யஷ் சின்ன பட்ஜெட் படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசிய கேஜிஎஃப் பட தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ”யஷ் தற்போது மிகப்பெரிய இந்திய நட்சத்திரமாக உருவாகிவிட்டார். அவர் இனி கன்னட நடிகரோ, தென்னிந்திய நடிகரோ இல்லை. எனவே அவரால் இனி சின்ன பட்ஜெட் படங்களில் நடிக்க முடியாது. பேன் இந்தியா படங்களில் மட்டுமே நடிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.