முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர்களின் மோதலால் தமிழக காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று சமயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், 'தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு வந்தவர். அவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருப்பதைவிட பாஜகவுக்கு செல்வதே நல்லது. அங்கு அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் உண்டு. இப்போதும் ஒன்றும் கால தாமதம் ஆகிவிடவில்லை. அவர் மீண்டும் வாஜ்பாயின் பாஜகவிற்கு சென்றால் பாஜகவிற்கு நல்லது மட்டுமின்றி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியும் சிறப்பாக இருக்கும்" என்று கூறினார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்கு இன்று பதிலளித்த திருநாவுக்கரசர், 'ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் எந்த கட்சியில் இருக்க வேண்டும் என்று முடிவு எடுக்க தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.