மிளகாய் வத்தலை மிக்ஸ்சியில் தூள் செய்யும் போது சிறிது கல் உப்பை சேர்த்து திரித்தால் நன்கு தூளாகி விடும். பூரிக்கு மாவு பிசையும் போது ஒரு மேஜைக்கரண்டி கார்ன் ப்ளார் சேர்த்து செய்தால் பூரி மிருதுவாக இருக்கும்.
ஆப்பம், இடியாப்பத்திற்கு ஊற்றி சாப்பிட எடுக்கும் தேங்காய் பாலுடன் சிறிது ஏலக்காய் தூள் சேர்த்தால் நல்ல மணமாக இருக்கும்.
வீட்டில் ஒரு பத்தி ஸ்டாண்ட் அதிகமாக இருந்தால் அதன் துவாரங்களில் சிறிய கலர் பூக்களை வைத்து சாமி படம் முன் வைக்கலாம்.
அரைக் கிலோ ரவையை வாங்கி மொத்தமாக வறுத்து வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி செய்வதற்கு எளிதாக இருக்கும்.
முட்டை ஆம்லெட் செய்யும் போது முட்டை கலவையுடன் ஒரு தேக்கரண்டி வெண்ணைய் சேர்த்து செய்தால் ஆம்லெட் மிருதுவாக இருக்கும்.
காய்கறி வெட்டும் பலகையிலுள்ள கறையை போக்க ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை பிழிந்து கறை உள்ள இடங்களில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு கழுவினால் பலகை பளிச்சென்று ஆகிவிடும்.
ரசம் வைக்கும் போது தேங்காய் உடைத்த தண்ணீருடன் சேர்த்து செய்தால் ரசம் நல்ல ருசியாக இருக்கும்.
வெங்காய வடகத்தை வெறும் கடாயில் போட்டு லேசாக சூடாக்கி விட்டு பிறகு எண்ணெயில் பொரித்தால் நன்றாக பொரிந்து மொறு மொறுப்பாக இருக்கும்.
ஒரு கப் கோதுமை மாவுக்கு இரண்டு பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து மாவுடன் சேர்த்து பிசைந்து பூரி செய்தால் நல்ல மொறு மொறுப்பாக இருக்கும்.
இடியாப்ப மாவுடன் சிறிது நெய் சேர்த்து பிசைந்து இடியாப்பம் பிழிந்தால் மிகவும் மென்மையாக இருக்கும்.