வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டில் படங்களை மாட்டுவதற்கு சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன அவை என்ன என்பதை பார்ப்போம்.
வீட்டில் கடவுளின் படங்களை மாட்ட சரியான இடங்கள் மற்றும் திசைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போர், வன்முறை மிக்க காட்சிகளை கொண்ட படங்களை வீட்டின் எந்த ஒரு அறையிலும் மாட்டாக்கூடாது.
ரதத்திலிருக்கும் குருச்சேத்திர கிருஷ்ணன் அர்ஜூனன் படத்திற்கு பதிலாக, அர்ஜூனனுக்கு கிருஷ்ண பரமாத்மா காட்டிய விஸ்வரூப தரிசன காட்சி கொண்ட படத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டலாம்.
வீட்டில் செல்வ பெருக பூஜையறையில் லட்சுமி, குபேரர் போன்றோரின் படங்களை வடக்கு திசையிலிருந்து தெற்கு திசை நோக்கி பார்த்தவாறு மாட்ட வேண்டும். வீட்டை துஷ்ட சக்திகள் அண்டாதிருக்க, சஞ்சீவி மலையை தூக்கியவாறு இருக்கும் ஆஞ்சநேயர் படத்தை தென் திசையை பார்த்தவாறு மாட்டலாம்.
உக்கிர தோற்றத்தில் இருக்கும் துர்க்கை, காளி, நரசிம்மர், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களின் படங்களை வீட்டில் எங்கும் மாட்டக்கூடாது.
புலி, சிங்கம் போன்ற விலங்குகள் பற்களை காட்டியவாறு, வேட்டையாடும் வகையில் இருக்கும் படங்களையும் மாட்டக்கூடாது. ஆனால் இவ்விலங்குகள் ஜோடியாக குட்டிகளோடு இருக்கும் படங்களை வீட்டின் கிழக்கு மற்றும் மேற்கு திசை பார்த்தவாறு மாட்டிவைக்கலாம்..
கிருஷ்ண பரமாத்மா மற்றும் ராதை சேர்ந்திருக்கும் படங்களை வீட்டில் படுக்கையறையில் மட்டுமே மாட்டுவது நல்லது. இதனால் கணவன் மனைவிக்குள் இருக்கும் அந்நோன்யம் எப்போதும் நீடிக்கும்.