வாஸ்து சாஸ்திரம் என்பது மதம் சார்ந்த ஒன்றா?
, திங்கள், 9 டிசம்பர் 2013 (16:13 IST)
வாஸ்து சாஸ்திரம் என்பது இந்து மதம் சார்ந்த ஒன்று என்று இன்றளவில் பலரால் கூறப்பட்டு வருகிறது. உண்மையில் வாஸ்துவை அறிவியல் கண்ணோட்டத்தில் அணுகும் எவரும் அதை மதம் சார்ந்த விஷயமாக கருதமாட்டார்கள். ஆறறிவு கொண்ட மனிதன் சமுதாயத்தால் கூறப்படும் அனைத்து கருத்தையும் தன் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்த பிற்பாடே அதனை நம்ப வேண்டும்.வாஸ்துவில் கூறப்படும் உண்மைகள் அனைத்தும் அறிவியல் சார்ந்தே இருக்கிறது என்கிறபோது அது எப்படி மதம் சார்ந்த விஷயமாக கருதப்படும். எந்த நிலையிலும் வாஸ்துவில் பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களுக்கும், தேவையில்லாமல் செய்யப்படும் பூஜை, மந்திரம், தந்திரம் போன்ற கண்கட்டு வித்தைகளுக்கு என்றுமே வேலையில்லை. எனவே சூரியனை ஆதாரமாகவும், பூமியை இருப்பிடமாகவும் வைத்துள்ள நம் மனித இனம் அனைத்திற்கும் வாஸ்து என்பது அடிப்படையான ஒன்றாகும். இது என்றைக்குமே மதத்தின் கோட்பாட்டுக்குள் வராது.