தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் - 2 கப்
புளி - நெல்லிக்காய் அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலைப் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
பெருங்காயத்தூள் - சிறிதளவு
வேர்க்கடலை - 1 மேஜைக்கரண்டி
மிளகாய் வத்தல் - 2
வறுத்து பொடிக்க வேண்டியவை:
மிளகாய் வத்தல் - 2
தனியா - 1 மேஜைக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
எள்ளு - 1 மேஜைக்கரண்டி
செய்முறை:
அடுப்பில் வெறும் கடாயில் மிளகாய் வத்தல், தனியா விதை, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் எள்ளு சேர்த்து லேசாக வறுத்து அடுப்பை ஆப் செய்து விடவும். நன்கு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.
புளியை 200 மில்லி தண்ணீரில் உறவைத்து கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து நல்வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும் உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், கடலைப்பருப்பு வேர்க்கடலை கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின்னர் பெருங்காயத்தூள் சேர்க்கவும். புளித் தண்ணீர், மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
புளிக் காய்ச்சல் கெட்டியானதும் உப்பு மற்றும் வறுத்து பொடித்த தூளை சேர்த்து கிளறி அடுப்பை ஆப் பண்ணவும். ஆற வைத்துள்ள சாதத்தில் தேவையான அளவு புளிக்காய்ச்சலை சேர்த்து கிளறவும். உப்பு தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். சுவையான புளி சாதம் தயார்.