அறியாமல் ஒரு கொலை செய்துவிடுகிறீர்கள். எப்படியாவது அந்தக் கொலையை இன்னொருவன் தலையில்கட்டி போலீசிடம் எஸ்கேப்பாக வேண்டும். இதற்கு என்ன மாதிரி மொள்ளமாரி, முடிச்சவிக்கி வேலைகள் செய்வோம்? அதுதான் Detour.
படத்தின் நாயகன், லா ஸ்டுடன்ட். அம்மா கோமா நிலையில் ஹாஸ்பிடலில் இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் ஒரு விபத்து. அம்மாவும், அம்மாவின் இரண்டாவது கணவரும் - அதாவது நாயகனின் ஸ்டேப் ஃபாதர் - காரில் செல்லும் போது ஏற்படுகிற விபத்தில் அம்மா கோமா ஸ்டேஜுக்கு போக, ஸ்டெப் ஃபாதர் சின்ன சிராய்ப்புடன் தப்பித்துக் கொள்கிறார். சொத்துக்காக அந்தாள்தாள் அம்மாவை இப்படியாக்கிவிட்டான் என்பது நாயகனின் தீராக் கோபம்.
ஒருநாள் தண்ணியடித்துவிட்டு தாதா ஒருவனிடம் ஸ்டெப் பாதலை போட்டுத்தள்ள வேண்டுமென்கிறான். மறுநாள் போதை தௌpந்து பார்த்தால் வீட்டு வாசலில் தாதா தனது பிராஸ்டிட்யூட் தோழியுடன் வந்து நிற்கிறான்.
கிளம்பு, நீ சொன்ன மாதிரி உன் ஸ்டெப் ஃபாதரை லாஸ் வேகஸில் வைத்து கொல்லலாம் என்கிறான் தாதா. அவனுடன் போவதா வேண்டாமா?
குழப்பத்துடன் கதவுக்கு இந்தப் பக்கம் நிற்கும் நாயகன் போவது என்று முடிவெடுக்கிறான். அந்தப் பக்கம் நிற்கும் நாயகன் வேண்டாம் என்று முடிவெடுக்கிறான். இப்போது படம் இரண்டாக பிரிகிறது. கொலை செய்ய தாதாவுடன் செல்லும் நாயகன், தாதாவை மறுத்துவிட்டு வீட்டிலிருக்கும் நாயகன்.
இந்த இரண்டு கதையும் மாறி மாறி வருகின்றன. இதில் இரண்டாவது கதையில், வீட்டில் நடக்கும் சண்டையில் நாயகனே தனது ஸ்டெப் ஃபாதரை கொன்று விடுகிறான். அடடா, அடுத்து என்ன நடக்கும் என்று சீட் நுனியில் உட்காரும் போது இயக்குனர் செமையாக ஒரு ட்விஸ்ட் வைக்கிறார்.
ஹாலிவுட்டில் எக்கச்சக்க பி கிரேட் படங்கள் எடுக்கப்படும். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு ரசிக்கத்தக்கதாய் பல படங்கள் தேறும். அப்படியான படங்களை எடுக்கிறவர் கிறிஸ்டோபர் ஸ்மித். அவரது லேட்டஸ்ட் படம்தான் Detour.
போரடிக்காமல் ஒரு த்ரில்லரை பார்க்க இந்தப் படம் உத்தரவாதம்.