90 ஆவது ஆஸ்கர் வழங்கும் விழா நாளை அமெரிக்காவில் வழங்கப்பட இருக்கிறது இந்திய நேரப்படி காலை 7 மணி முதல் விழா தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படும்.
உலகளவில் வழங்கப்படும் திரை விருதுகளில் ஆஸ்கார் விருது மிக முக்கியமான விருது. ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களுக்கு பலப் பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டுப் படங்களுக்கும் தனிப்பிரிவில் விருது வழங்கப்படுகிறது. மேலும் சிறந்த குறும்படம் மற்றும் ஆவணப்படம் ஆகியப் பிரிவுகளின் கீழும் விருதுகள் வழங்கப்பட இருக்கினறன.
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கருக்கு முன்னரோ அல்லது விருது வழங்கப்பட்ட பின்னரோ பல சர்ச்சைகள் வெடிப்பது வழக்கம்தான். இந்த ஆண்டும் விருது வழங்கும் நிகழ்ச்சி நீண்ட நேரத்தை எடுத்துக்கொள்வதால் சிறந்த ஒளிப்பதிவு, எடிட்டிங், லைவ் ஆக்ஷன் குறும்படம் மற்றும் மேக்கப்& ஹேர்ஸ்டைல் ஆகிய விருதுகள் வழங்கப்படும்போது விளம்பரதாரர்களின் விளம்பரங்கள் ஒளிப்பரப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினர் கோபமடைந்து தங்கள் கண்டனங்களை ஆஸ்கர் கமிட்டிக்கு எதிராகப் பதிவு செய்தனர். இதனால் ஆஸ்கர் கமிட்டிப் பணிந்து அனைத்து விருதுகளும் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்படும் என அறிவித்தனர்.
இதையடுத்து அனைத்து சர்ச்சைகளும் ஓய்ந்துள்ள நிலையில் நாளை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதனை இந்திய நேரத்தில் நாளைக் காலைம்7 மணி முதல் நேரலையில் தொலைக்காட்சிகளில் காணலாம்.